Wednesday, August 25, 2010

நான் மகான் அல்ல‌



இயக்கம் : சுசீந்திரன்
நடிப்பு : கார்த்திக், காஜல் அகர்வால், ஜெயப்பிரகாஷ்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வசனம் : பாஸ்கர் சக்தி

கார்த்திக், சுசீந்திரன்,ஜெயப்பிரகாஷ் எல்லோருக்குமான இன்னொரு வெற்றிப்படைப்பு " நான் மகான் அல்ல".
முற்பாதி முழுவதும் நகரும் சுவடு தெரியாமலேயே மிக மிக சுவாரஷ்யமாக நகர்கிறது படம். வசனம் மிக இயல்பாகவும் இளமையாகவும் கை கொடுத்திருக்கிறது முற்பாதி முழுவதும்.

இளஞ்கிகளின் (இளங்கிளிகள் என்றும் சொல்லலாம்) மனதில் தற்போது கூடாரம் போட்டு உட்கார்ந்திருக்கும் கார்த்தி இப்படத்தின் மூலம் பிளாட் வாங்கி மனை கட்டி குடியே புகுந்திருப்பார். அவ்வளவு இளமை, குறும்புடன் எல்லோரின் மனதிற்கும் பிடித்த வாலிபராக வலம் வருகிறார்.

காஜல் அகர்வால் கார்த்திக்கிடம், காதல் வலையில் சிக்கிய மீனாய் தவிக்கிறார் நம்மையும் தவிக்க விடுகிறார் முற்பாதி வரை.பிற்பாதியில் அவருக்கு வேலை இல்லை.அதனால் படம் பாதிக்கப்படவும் இல்லை.

நந்தாவில் சின்ன "சூர்யா" வாக வரும் குட்டிப்பையன் தான் வில்லன். நன்றாகவே நடித்திருக்கிறார். கல்லூரி படித்துக்கொண்டு இருக்கும் அவரும் உடன் படிக்கும் 4 நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் வினைகள் திக் திக் ரகம். படத்தின் பலம்.

பாடல்களில் யுவன் கலக்கியிருக்கிறார். இளமை கெடாத இனிய இசை

படம் முடியும் வரை நம்மை இருக்கையில் கட்டி போட்டே விடுகிறார் இயக்குனர்.

தெளிந்த திரைக்கதை, வேகம் அதிகம், சுவையும் அதிகம்

தாராளமாக படத்தை 2 முறை பார்க்கலாம்......

No comments:

Post a Comment