Wednesday, August 25, 2010

நான் மகான் அல்ல‌



இயக்கம் : சுசீந்திரன்
நடிப்பு : கார்த்திக், காஜல் அகர்வால், ஜெயப்பிரகாஷ்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வசனம் : பாஸ்கர் சக்தி

கார்த்திக், சுசீந்திரன்,ஜெயப்பிரகாஷ் எல்லோருக்குமான இன்னொரு வெற்றிப்படைப்பு " நான் மகான் அல்ல".
முற்பாதி முழுவதும் நகரும் சுவடு தெரியாமலேயே மிக மிக சுவாரஷ்யமாக நகர்கிறது படம். வசனம் மிக இயல்பாகவும் இளமையாகவும் கை கொடுத்திருக்கிறது முற்பாதி முழுவதும்.

இளஞ்கிகளின் (இளங்கிளிகள் என்றும் சொல்லலாம்) மனதில் தற்போது கூடாரம் போட்டு உட்கார்ந்திருக்கும் கார்த்தி இப்படத்தின் மூலம் பிளாட் வாங்கி மனை கட்டி குடியே புகுந்திருப்பார். அவ்வளவு இளமை, குறும்புடன் எல்லோரின் மனதிற்கும் பிடித்த வாலிபராக வலம் வருகிறார்.

காஜல் அகர்வால் கார்த்திக்கிடம், காதல் வலையில் சிக்கிய மீனாய் தவிக்கிறார் நம்மையும் தவிக்க விடுகிறார் முற்பாதி வரை.பிற்பாதியில் அவருக்கு வேலை இல்லை.அதனால் படம் பாதிக்கப்படவும் இல்லை.

நந்தாவில் சின்ன "சூர்யா" வாக வரும் குட்டிப்பையன் தான் வில்லன். நன்றாகவே நடித்திருக்கிறார். கல்லூரி படித்துக்கொண்டு இருக்கும் அவரும் உடன் படிக்கும் 4 நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் வினைகள் திக் திக் ரகம். படத்தின் பலம்.

பாடல்களில் யுவன் கலக்கியிருக்கிறார். இளமை கெடாத இனிய இசை

படம் முடியும் வரை நம்மை இருக்கையில் கட்டி போட்டே விடுகிறார் இயக்குனர்.

தெளிந்த திரைக்கதை, வேகம் அதிகம், சுவையும் அதிகம்

தாராளமாக படத்தை 2 முறை பார்க்கலாம்......

Thursday, August 19, 2010

வம்சம் படத்தில் நான் கண்டது

நடிகர்கள்: அருள்நிதி, சுனேனா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி     
கலை இயக்கம்: தேவராஜன்                                                     
இசை: தாஜ் நூர்
இயக்கம்: பாண்டி ராஜ்
தயாரிப்பு: மோகனா மூவீஸ்

ஏற்கனவே குடும்ப அரசியல் என்ற வர்ணனைகளுக்கு மத்தியில் வம்ச சினிமா என்றாகிவிட போகிறது என்று
கலைஞர் அவர்களே ஒதுக்க நினைத்த தலைப்பு. நல்ல வசீகர தலைப்பு. கதைக்கு மிக பொருத்தமானதும் கூட.

இயக்குனராக "பசங்க"பாண்டிராஜ் (இந்த அடைமொழி தேவைபடாதவாறு அவர் அடுத்தடுத்த படங்கள் தர வேண்டும்)
பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. கதையை தெளிவாக சொல்லியிருக்கிறார். திரைக்கதையை இன்னும் பலமாக செய்திருக்கலாம்.


அடக்கமாய் வளர்க்க பட்ட கதா நாயகன் தன் காதலிக்காக‌ எதிரியை பந்தாடுகிறார்.அந்த போக்கில் கதையை பலப்படுத்தியிருக்கலாம்.அதை விடுத்து எதிரியிடம் மன்னிப்பு கேட்பதும், காதலியிடம் மறந்து விட மன்றாடுவதும் அவர்  போன் போட்டு மிரட்டுவதும், காதலி அனுப்பிய ஆட்களை எதிரியின் ஆள் என நினைத்து திரும்ப காதலியிடம் மருகுவதும் ஏன்ங்குறேன் ????  கழுத்தை சுத்தி காதை தொடுகிற வேலை

பழைய பாணி என தவிர்க்க நினைத்து சில சுவாரஷ்யங்களை கோட்டை விட்டு விட்டார்கள்.

கதையை தாங்கும் தூண்களாக வில்லன் ஜெயப்பிரகாஷும், கிஷோரும் வலம் வருகிறார்கள். ஆனால் கிஷோரை கொள்வதற்கு ஜெயப்பிரகாஷ் சொல்லும் காரணம் மொக்கயா இருக்கு. ஊருக்கு பெரிய மனுசன் (அந்தஷ்த்தில் சொன்னவுடனே ஒரு பெண்ணின் காலில் விழுந்து....கெத்தா காட்டிவிட்டு இப்டி பண்றது அந்த கதாபாத்திரத்தின் வலிமையை குறைப்பதாக உள்ளது.

கஞ்சா கருப்பு இதுல கவர்மெண்ட் ஆபீசர். திருவிழா ஆட்டத்தில் அன்பளிப்பு அளித்து விளம்பரம் செய்கிறார் :‍‍). பூனை அல்ல அல்ல திரிஷா விடு தூது மூலமாக காதல் செய்கிறார். இப்படியாக  தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

7 அடி இருந்துகொண்டு கொஞ்சி கொஞ்சி பேசுகிறார் கதா நாயகன் கதையின் எல்லா நிலைகளிலும். உடல் மொழியும் இன்னும் மெருகேற வேண்டும். ஆனால் கதையில் அவர் ரசிக்கும் படியாகவே இருக்கிறார்.
சண்டைக்காட்சியில் ஹீரோ அடிக்கிறார். மற்றவர்கள் அடி வாங்குகிறார்கள். அடிக்க முடியாத காட்சிகளில் ஓடியே தப்பித்து விடுகிறார்.

கதா நாயகி மாடு அல்ல அல்ல அசின் விடு தூது மூலமாக காதல் வயப்படுகிறார். நிறைய இடங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் படுத்தியிருக்கிறார். ஒரு பாட்டும் சரி இல்ல தலைவா

கலை படத்துல எங்க வருதுன்னே தெரியல.மிக நேர்த்தியாக செயல் பட்டுஇருக்கிறார்.

கேமரா திருவிழா அழகை வாரி வழங்கி இருக்கிறது அழகாகவும் அதிகமாகவும்.

திரைக்கதையை இன்னும் கொஞ்சம் வலுப்படுத்தியிருந்தால்
வம்சம் மூலமாக துவம்சம்  செய்திருக்கலாம்.....

பிம்பம்: "அவை" அல்ல "அது"

பிம்பம்: "அவை" அல்ல "அது"