Tuesday, October 5, 2010

எந்திரன்

Starring               : Rajinikanth, Aishwarya Rai, Karunas, Santhanam.
Direction            : Shankar
Music                 : AR Rahman
Dialogue            : Sujatha
Cinematography: Ratnavelu  
Editing               : Antony  
Art direction      : Sabu Cyril  
Sub titles            : Rekhs
Production         : Sun Pictures 
 
இந்திய சினிமாவின் முக்கியமாக தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வு எந்திரன்                   திரைப்படம்
மிக அதிக பொருட்செலவில் உருவான மிக அருமையான பொழுதுபோக்கு அம்சம். ரஜினி வசீகரனாகவும், என்திரனாகவும், upgraded தந்திரனாகவும் கலக்கி,கலகலப்பாக்கி,மிரட்டியுமிருக்கிறார்.

ஐஸ்வர்யா படுத்தி இருக்கிறார் நம்மையும் வசீகரன் ரஜினியையும் ரோபோ ரஜினியையும் கிடைத்த gap ல் கலாபவன் மணியையும் தன் அழகால் :-)
மனிதனிடம் இருக்கிற ஒன்று ரோபோ க்கு வந்ததால் விளைந்த விளைவு தான் கதை.அது கோபதாப உணர்ச்சிதான் அன்றி வேறொன்றுமில்லை.
ரஜினி, ஷங்கர், கலாநிதிமாறன் மும்மூர்த்திகளில் ஒருவர் இல்லாவிட்டாலும் இந்த படம் தமிழில் சாத்தியமில்லாத ஒன்று.இத்துணை பிரமாண்டம் மற்றும் பொருட்செலவு  மட்டுமல்லாமல் தொழில்நுட்ப நேர்த்தியும்  இவர்கள் மூவர் கூட்டணியால்தான் சாத்தியமானது.
தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு அபரிமிதமானது. அதற்க்கான சன்மானமாக படம் முழுமைக்கும் ரசிகர்களின் கரவொலி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

முற்பாதி முழுதும் சிட்டி ரோபோ ரஜினி பிரமாதபடுத்தி இருக்கிறார்.அவர் செய்யும் லூட்டிகளும் சாகசங்களும் வயது வித்தியாசமின்றி எல்லோரும் ரசிக்கும் படி உள்ளது. சிட்டி ரோபோ காதல் உணர்வு கொள்வதும் அதை விதவிதமாக வெளிக்கட்டுவதும் வசீகரன் ரஜினி அதற்க்கு கடுப்பாவதும் ரசிக்கும் ரகம்.

பிரசவம் பார்த்த சிட்டி ரோபோவுக்கு ஐஸ்வர்யா முத்தம் கொடுக்க காதல் பூக்கிறது இரும்பு இதயத்தில். மீண்டும் அந்த இன்ப முத்தம் பெற ஐஸ்வர்யா அறைக்கு செல்லும் சிட்டி ரோபோ ரஜினி " வேறு யாரவது பிரசவத்திற்கு  இருக்கிறார்களா" என்கிற இடத்தில் மறைந்த புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா மின்னலாய் பளிச்சிடுகிறார்.
படத்தில் வரும் visuval effects எல்லோரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.எந்த expression ம் தராமல் ரசிக்க வைக்கும் சிட்டி ரோபோவாகவும் சரி, குலுங்கி கொண்டே சிரித்துமிரட்டும் updated ரோபோவாகவும் சரி, பத்து வருட உழைப்பிற்கான அங்கீகாரத்திற்காக போராடும் scientist ஆகவும் சரி ரஜினி தனக்கு நிகர் தானேதான் என்று (எல்லோர்க்கும் தெரிந்த ஒன்றுதான் எனினும்)  மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

இறுதிக்கட்ட காட்சிகள் தமிழ் சினிமா வரலாற்றில் யாரும் பார்த்தறியாத ஒன்று.வசீகரன்
ரஜினி தன் எல்லைக்குள் நுழைந்து விட்டதை உணர்ந்த வில்லன் ரோபோ எல்லா ரோபோக்களையும் நிற்க வைத்து கத்தியை வயிற்றில் சொருகி "rooobooooo " என்று தனக்கான தனி ஸ்டைலில் சொல்லும்போது திரையங்கமே ச்சும்மா அதிருதில்ல.

தேவைக்கேற்ப அத்துணை ரோபோ ரஜினிக்களும் ஒன்று சேர்ந்து  பாம்பாக, சுட்டுக்கொண்டே உருண்டு வரும் பந்தாக இன்னும் வித விதமாக உருவம் மாறி மாறி வரும்                   இறுதிக்காட்சி மகுடத்தில் மாணிக்கம்.

படத்தில் சொல்லவேண்டிய விசயங்களை விட பார்க்க வேண்டிய விஷயங்கள் தான் அதிகம். அதனால் எல்லோரும் உடனடியாக செய்ய வேண்டியது என்னவென்றால் முதலில் போய் படத்தை பாருங்கள்.

Wednesday, September 8, 2010

PRANHA


மீண்டும் ஒரு திகிலூட்டும் ஆங்கிலப்படம்.

உலகையே அளிக்க திட்டமிடும் வில்லனிடம் இருந்து உலகை காப்பாற்றும் superhero , வித்தியாசமான  உயிரியிடமிருந்து தப்பிக்க போராடும் கதையின் நாயகன் இந்த வகை ஆங்கிலப்படங்களில் இது இரண்டாம் ரகம்.

சரியாக 1 .30 மணி நேர படத்தில் அளவில் சிறிய ஆனால் குணத்தில் கொடூரமான மீன் கூட்டத்தை வைத்து மிக நிறைவான படத்தை நம் காட்சிக்கு வழங்கியிருக்கிறார்கள். கத்தி போன்ற கூர்மையான பெரிய பற்களால் சிக்கும் மனிதர்களை சிதைத்து எலும்புகூட்டை மட்டும் மிச்சமாய் வைத்து தின்று தீர்க்கும் மீன்கள் தான் கதையின் அளவுக்கு அதிகமான நாயகர்கள்.

கண்களை உறுத்தாமல் தேவையான இடங்களில் மட்டும் கையாளப்பட்ட 3D படத்தின் கூடுதல் வசீகரம்.

ஒரு ஏரியில் திடீரென்று ஏற்படும் நிலப்பிளவில் பெரிய பள்ளதொடு சேர்ந்து கொடிய பற்கள் நிறைந்த இந்த மீன்களும் அந்த ஏரியில் உருவாகிறது. அப்போது மீன் பிடித்து கொண்டிருக்கும் ஒரு முதியவர்தான் இந்த மீன்களின் முதல் உணவாகிறார் நமக்கு முதல் திகிலாகிறார். படத்தின் மூன்று இடங்களில் எனக்கு தூக்கிவாரிப்போட்டது(என்னமா பயமுறுத்துறாங்க).

இதற்கிடையே நகர மக்களை காக்கும் பெண் போலீஸ் அதிகாரி அவர்தம் குடும்பமாக வயதுக்கு வந்த மூத்த மகன், ஒரு ஆண் ஒரு பெண் என இரு பொடுசுகள், வயதுக்கு வந்த மூத்த மகனின்  ஒருதலைக்காதல், அவன்  காதலி  இவர்களை சுற்றி பின்னப்பட்ட திரைக்கதை வலையில் சிக்காத மீன்கள்தான் நாயகர்கள்.

மொத்த படமுமே ஒரு இறுதிகட்ட காட்சி போன்ற விறுவிறுப்பு
இரண்டாம் பாகத்துக்கு அடிகோலும் கடைசி காட்சி

எல்லாம் சேர்ந்து ஒரு நிறைவான படத்தை பார்த்த திருப்தியை ஏற்படுத்த தவறவில்லை.

Wednesday, August 25, 2010

நான் மகான் அல்ல‌



இயக்கம் : சுசீந்திரன்
நடிப்பு : கார்த்திக், காஜல் அகர்வால், ஜெயப்பிரகாஷ்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வசனம் : பாஸ்கர் சக்தி

கார்த்திக், சுசீந்திரன்,ஜெயப்பிரகாஷ் எல்லோருக்குமான இன்னொரு வெற்றிப்படைப்பு " நான் மகான் அல்ல".
முற்பாதி முழுவதும் நகரும் சுவடு தெரியாமலேயே மிக மிக சுவாரஷ்யமாக நகர்கிறது படம். வசனம் மிக இயல்பாகவும் இளமையாகவும் கை கொடுத்திருக்கிறது முற்பாதி முழுவதும்.

இளஞ்கிகளின் (இளங்கிளிகள் என்றும் சொல்லலாம்) மனதில் தற்போது கூடாரம் போட்டு உட்கார்ந்திருக்கும் கார்த்தி இப்படத்தின் மூலம் பிளாட் வாங்கி மனை கட்டி குடியே புகுந்திருப்பார். அவ்வளவு இளமை, குறும்புடன் எல்லோரின் மனதிற்கும் பிடித்த வாலிபராக வலம் வருகிறார்.

காஜல் அகர்வால் கார்த்திக்கிடம், காதல் வலையில் சிக்கிய மீனாய் தவிக்கிறார் நம்மையும் தவிக்க விடுகிறார் முற்பாதி வரை.பிற்பாதியில் அவருக்கு வேலை இல்லை.அதனால் படம் பாதிக்கப்படவும் இல்லை.

நந்தாவில் சின்ன "சூர்யா" வாக வரும் குட்டிப்பையன் தான் வில்லன். நன்றாகவே நடித்திருக்கிறார். கல்லூரி படித்துக்கொண்டு இருக்கும் அவரும் உடன் படிக்கும் 4 நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் வினைகள் திக் திக் ரகம். படத்தின் பலம்.

பாடல்களில் யுவன் கலக்கியிருக்கிறார். இளமை கெடாத இனிய இசை

படம் முடியும் வரை நம்மை இருக்கையில் கட்டி போட்டே விடுகிறார் இயக்குனர்.

தெளிந்த திரைக்கதை, வேகம் அதிகம், சுவையும் அதிகம்

தாராளமாக படத்தை 2 முறை பார்க்கலாம்......

Thursday, August 19, 2010

வம்சம் படத்தில் நான் கண்டது

நடிகர்கள்: அருள்நிதி, சுனேனா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி     
கலை இயக்கம்: தேவராஜன்                                                     
இசை: தாஜ் நூர்
இயக்கம்: பாண்டி ராஜ்
தயாரிப்பு: மோகனா மூவீஸ்

ஏற்கனவே குடும்ப அரசியல் என்ற வர்ணனைகளுக்கு மத்தியில் வம்ச சினிமா என்றாகிவிட போகிறது என்று
கலைஞர் அவர்களே ஒதுக்க நினைத்த தலைப்பு. நல்ல வசீகர தலைப்பு. கதைக்கு மிக பொருத்தமானதும் கூட.

இயக்குனராக "பசங்க"பாண்டிராஜ் (இந்த அடைமொழி தேவைபடாதவாறு அவர் அடுத்தடுத்த படங்கள் தர வேண்டும்)
பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. கதையை தெளிவாக சொல்லியிருக்கிறார். திரைக்கதையை இன்னும் பலமாக செய்திருக்கலாம்.


அடக்கமாய் வளர்க்க பட்ட கதா நாயகன் தன் காதலிக்காக‌ எதிரியை பந்தாடுகிறார்.அந்த போக்கில் கதையை பலப்படுத்தியிருக்கலாம்.அதை விடுத்து எதிரியிடம் மன்னிப்பு கேட்பதும், காதலியிடம் மறந்து விட மன்றாடுவதும் அவர்  போன் போட்டு மிரட்டுவதும், காதலி அனுப்பிய ஆட்களை எதிரியின் ஆள் என நினைத்து திரும்ப காதலியிடம் மருகுவதும் ஏன்ங்குறேன் ????  கழுத்தை சுத்தி காதை தொடுகிற வேலை

பழைய பாணி என தவிர்க்க நினைத்து சில சுவாரஷ்யங்களை கோட்டை விட்டு விட்டார்கள்.

கதையை தாங்கும் தூண்களாக வில்லன் ஜெயப்பிரகாஷும், கிஷோரும் வலம் வருகிறார்கள். ஆனால் கிஷோரை கொள்வதற்கு ஜெயப்பிரகாஷ் சொல்லும் காரணம் மொக்கயா இருக்கு. ஊருக்கு பெரிய மனுசன் (அந்தஷ்த்தில் சொன்னவுடனே ஒரு பெண்ணின் காலில் விழுந்து....கெத்தா காட்டிவிட்டு இப்டி பண்றது அந்த கதாபாத்திரத்தின் வலிமையை குறைப்பதாக உள்ளது.

கஞ்சா கருப்பு இதுல கவர்மெண்ட் ஆபீசர். திருவிழா ஆட்டத்தில் அன்பளிப்பு அளித்து விளம்பரம் செய்கிறார் :‍‍). பூனை அல்ல அல்ல திரிஷா விடு தூது மூலமாக காதல் செய்கிறார். இப்படியாக  தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

7 அடி இருந்துகொண்டு கொஞ்சி கொஞ்சி பேசுகிறார் கதா நாயகன் கதையின் எல்லா நிலைகளிலும். உடல் மொழியும் இன்னும் மெருகேற வேண்டும். ஆனால் கதையில் அவர் ரசிக்கும் படியாகவே இருக்கிறார்.
சண்டைக்காட்சியில் ஹீரோ அடிக்கிறார். மற்றவர்கள் அடி வாங்குகிறார்கள். அடிக்க முடியாத காட்சிகளில் ஓடியே தப்பித்து விடுகிறார்.

கதா நாயகி மாடு அல்ல அல்ல அசின் விடு தூது மூலமாக காதல் வயப்படுகிறார். நிறைய இடங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் படுத்தியிருக்கிறார். ஒரு பாட்டும் சரி இல்ல தலைவா

கலை படத்துல எங்க வருதுன்னே தெரியல.மிக நேர்த்தியாக செயல் பட்டுஇருக்கிறார்.

கேமரா திருவிழா அழகை வாரி வழங்கி இருக்கிறது அழகாகவும் அதிகமாகவும்.

திரைக்கதையை இன்னும் கொஞ்சம் வலுப்படுத்தியிருந்தால்
வம்சம் மூலமாக துவம்சம்  செய்திருக்கலாம்.....

பிம்பம்: "அவை" அல்ல "அது"

பிம்பம்: "அவை" அல்ல "அது"

Wednesday, June 2, 2010

சிங்கம்


அடிச்சா ஒன்னரை டன் வெயிட் டா என படம் நெடுக சொல்லி சொல்லி அடிக்கிறார்கள் ஹரியும் சூர்யாவும். சிந்திக்க இடைவெளி இல்லாமல் சூர்யாவின் அதிரடியில் கலங்கி போவது பிரகாஷ்ராஜ் மட்டுமல்ல நாமும்தான்."நீ அவனுக்கு buildup எத்துற அவன் ஒனக்கு buildup ஏத்துறான் என்னங்கடா" என படம் நெடுக பிரகாஷ் ராஜ் பிரகாச ராஜ். படம் முடிந்து வெளி வரும் பொது ஒரு ரசிகர் " செம்ம ஆக்டிங்" என்றார், அவர் சொன்னது பிரகாஷ் ராஜ் அவர்களின் நடிப்பை. விவேக் வழக்கம்போல.... இரட்டை அர்த்த வசனங்கள் கை கொடுத்த அளவுக்கு வேறு காட்சி அமைப்புகளோ body language ஓ அவருக்கு உதவவில்லை. அழகாக இருக்கிறார், உறுமி அடிக்கும் சூர்யா தளர்த்து போகும் வேளையிலே காதலிக்கும் மனைவிக்குமான வேறுபாடு சொல்லி அடைபட்ட சிங்கத்தின் கூண்டு கதவை திறக்கிறார் அனுஷ்கா. பாடல்களில் பட்டை கிளப்புகிறார் D .S .P . சுறா சாப்பிட்ட திமிங்கிலம் சிங்கத்தின் கர்ஜனையில் தினவு கண்டது, அது Sunpictures என்று சொல்லணுமா என்ன ....
சிங்கம் இப்போது தனிக்காட்டு ராஜா, காட்டுக்கு இராவணன் வரும் வரையில்...