Tuesday, October 5, 2010

எந்திரன்

Starring               : Rajinikanth, Aishwarya Rai, Karunas, Santhanam.
Direction            : Shankar
Music                 : AR Rahman
Dialogue            : Sujatha
Cinematography: Ratnavelu  
Editing               : Antony  
Art direction      : Sabu Cyril  
Sub titles            : Rekhs
Production         : Sun Pictures 
 
இந்திய சினிமாவின் முக்கியமாக தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வு எந்திரன்                   திரைப்படம்
மிக அதிக பொருட்செலவில் உருவான மிக அருமையான பொழுதுபோக்கு அம்சம். ரஜினி வசீகரனாகவும், என்திரனாகவும், upgraded தந்திரனாகவும் கலக்கி,கலகலப்பாக்கி,மிரட்டியுமிருக்கிறார்.

ஐஸ்வர்யா படுத்தி இருக்கிறார் நம்மையும் வசீகரன் ரஜினியையும் ரோபோ ரஜினியையும் கிடைத்த gap ல் கலாபவன் மணியையும் தன் அழகால் :-)
மனிதனிடம் இருக்கிற ஒன்று ரோபோ க்கு வந்ததால் விளைந்த விளைவு தான் கதை.அது கோபதாப உணர்ச்சிதான் அன்றி வேறொன்றுமில்லை.
ரஜினி, ஷங்கர், கலாநிதிமாறன் மும்மூர்த்திகளில் ஒருவர் இல்லாவிட்டாலும் இந்த படம் தமிழில் சாத்தியமில்லாத ஒன்று.இத்துணை பிரமாண்டம் மற்றும் பொருட்செலவு  மட்டுமல்லாமல் தொழில்நுட்ப நேர்த்தியும்  இவர்கள் மூவர் கூட்டணியால்தான் சாத்தியமானது.
தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு அபரிமிதமானது. அதற்க்கான சன்மானமாக படம் முழுமைக்கும் ரசிகர்களின் கரவொலி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

முற்பாதி முழுதும் சிட்டி ரோபோ ரஜினி பிரமாதபடுத்தி இருக்கிறார்.அவர் செய்யும் லூட்டிகளும் சாகசங்களும் வயது வித்தியாசமின்றி எல்லோரும் ரசிக்கும் படி உள்ளது. சிட்டி ரோபோ காதல் உணர்வு கொள்வதும் அதை விதவிதமாக வெளிக்கட்டுவதும் வசீகரன் ரஜினி அதற்க்கு கடுப்பாவதும் ரசிக்கும் ரகம்.

பிரசவம் பார்த்த சிட்டி ரோபோவுக்கு ஐஸ்வர்யா முத்தம் கொடுக்க காதல் பூக்கிறது இரும்பு இதயத்தில். மீண்டும் அந்த இன்ப முத்தம் பெற ஐஸ்வர்யா அறைக்கு செல்லும் சிட்டி ரோபோ ரஜினி " வேறு யாரவது பிரசவத்திற்கு  இருக்கிறார்களா" என்கிற இடத்தில் மறைந்த புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா மின்னலாய் பளிச்சிடுகிறார்.
படத்தில் வரும் visuval effects எல்லோரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.எந்த expression ம் தராமல் ரசிக்க வைக்கும் சிட்டி ரோபோவாகவும் சரி, குலுங்கி கொண்டே சிரித்துமிரட்டும் updated ரோபோவாகவும் சரி, பத்து வருட உழைப்பிற்கான அங்கீகாரத்திற்காக போராடும் scientist ஆகவும் சரி ரஜினி தனக்கு நிகர் தானேதான் என்று (எல்லோர்க்கும் தெரிந்த ஒன்றுதான் எனினும்)  மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

இறுதிக்கட்ட காட்சிகள் தமிழ் சினிமா வரலாற்றில் யாரும் பார்த்தறியாத ஒன்று.வசீகரன்
ரஜினி தன் எல்லைக்குள் நுழைந்து விட்டதை உணர்ந்த வில்லன் ரோபோ எல்லா ரோபோக்களையும் நிற்க வைத்து கத்தியை வயிற்றில் சொருகி "rooobooooo " என்று தனக்கான தனி ஸ்டைலில் சொல்லும்போது திரையங்கமே ச்சும்மா அதிருதில்ல.

தேவைக்கேற்ப அத்துணை ரோபோ ரஜினிக்களும் ஒன்று சேர்ந்து  பாம்பாக, சுட்டுக்கொண்டே உருண்டு வரும் பந்தாக இன்னும் வித விதமாக உருவம் மாறி மாறி வரும்                   இறுதிக்காட்சி மகுடத்தில் மாணிக்கம்.

படத்தில் சொல்லவேண்டிய விசயங்களை விட பார்க்க வேண்டிய விஷயங்கள் தான் அதிகம். அதனால் எல்லோரும் உடனடியாக செய்ய வேண்டியது என்னவென்றால் முதலில் போய் படத்தை பாருங்கள்.