உலகையே அளிக்க திட்டமிடும் வில்லனிடம் இருந்து உலகை காப்பாற்றும் superhero , வித்தியாசமான உயிரியிடமிருந்து தப்பிக்க போராடும் கதையின் நாயகன் இந்த வகை ஆங்கிலப்படங்களில் இது இரண்டாம் ரகம்.
சரியாக 1 .30 மணி நேர படத்தில் அளவில் சிறிய ஆனால் குணத்தில் கொடூரமான மீன் கூட்டத்தை வைத்து மிக நிறைவான படத்தை நம் காட்சிக்கு வழங்கியிருக்கிறார்கள். கத்தி போன்ற கூர்மையான பெரிய பற்களால் சிக்கும் மனிதர்களை சிதைத்து எலும்புகூட்டை மட்டும் மிச்சமாய் வைத்து தின்று தீர்க்கும் மீன்கள் தான் கதையின் அளவுக்கு அதிகமான நாயகர்கள்.
கண்களை உறுத்தாமல் தேவையான இடங்களில் மட்டும் கையாளப்பட்ட 3D படத்தின் கூடுதல் வசீகரம்.
ஒரு ஏரியில் திடீரென்று ஏற்படும் நிலப்பிளவில் பெரிய பள்ளதொடு சேர்ந்து கொடிய பற்கள் நிறைந்த இந்த மீன்களும் அந்த ஏரியில் உருவாகிறது. அப்போது மீன் பிடித்து கொண்டிருக்கும் ஒரு முதியவர்தான் இந்த மீன்களின் முதல் உணவாகிறார் நமக்கு முதல் திகிலாகிறார். படத்தின் மூன்று இடங்களில் எனக்கு தூக்கிவாரிப்போட்டது(என்னமா பயமுறுத்துறாங்க).
இதற்கிடையே நகர மக்களை காக்கும் பெண் போலீஸ் அதிகாரி அவர்தம் குடும்பமாக வயதுக்கு வந்த மூத்த மகன், ஒரு ஆண் ஒரு பெண் என இரு பொடுசுகள், வயதுக்கு வந்த மூத்த மகனின் ஒருதலைக்காதல், அவன் காதலி இவர்களை சுற்றி பின்னப்பட்ட திரைக்கதை வலையில் சிக்காத மீன்கள்தான் நாயகர்கள்.
மொத்த படமுமே ஒரு இறுதிகட்ட காட்சி போன்ற விறுவிறுப்பு
இரண்டாம் பாகத்துக்கு அடிகோலும் கடைசி காட்சி
எல்லாம் சேர்ந்து ஒரு நிறைவான படத்தை பார்த்த திருப்தியை ஏற்படுத்த தவறவில்லை.